search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மாயம்"

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயமானார்கள்.
    • இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலஅண்ணாதோப்பு பாண்டித்தெரு காம்பவுண்டை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பவித்ரா(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பவித்ராவிற்கும், அவரது வீட்டு மாடியில் வசிக்கும் வாலிபர் சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த இரு குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். அதன் பிறகு பவித்ராவிற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மாடி வீட்டில் வசித்த சரவணகுமாரையும் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அரசரடி முனிசிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்(44). வாடிப்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீனாட்சி, தனியார் நிறுவனத்திற்காக சர்வே பணிக்கு சென்று வந்தார். மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் மோகன் வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை வீடு திரும்பிய மோகன், மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் சேலம் தாத காப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). கடந்த மாதம் 28- ம் தேதி வீட்டில் இருந்து வேலை விஷயமாக வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் தேவதர்ஷினி (20). இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    சேலம் திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (27). கடந்த 1- ம் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் கணவர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பூமிநா யக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (50). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1- ம் தேதி அருகில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×